twitter

Thursday 26 April 2012

உன் சமையல் அறையில் - un samayal arayil

     
     தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும் எத்தனையோ இரவுகள் என்னை தூங்க வைத்துக் கொண்டிருப்பது திரு.இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள்தான். "திரு.இளையராஜா அவர்கள்" அன்னியமாய் படுவதால் இனி "இளையராஜா" என்றே தொடரலாம் என்று நினைக்கிறேன்.
பாடல் பதிவகங்களுக்கு சென்று பாடல்களை நாட்கணக்கில் தேடி ஒலி நாடாக்களில் பதிந்து கேட்டு ரசித்த ரசனை இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இந்த கணிணி யுகத்திலும் அப்படியே தொடர்கிறது எனக்கு.இன்னும் திரைக்கு வராத "படித்துறை" படத்தின் டிரைலரில் ஒலித்த ஒரு சில வரிகளை MP3 பாடல்களாக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் இளையராஜா மீது எனக்குள்ள கோட்டி எப்படி பட்டதென தெரிந்து கொள்ளலாம்.
     இப்படி பட்ட எனக்கு சமீபத்தில் வெளியான தோனி நாட் அவுட்(தோல்வியுறா தோனி) என்ற படத்தில் ஹரிஹரனும்,ஸ்ரேயா கோஷலும் தனித்தனியாய் பாடி வெளியான "விளையாட்டா பட கோட்டி" பாடலை கேட்டதும் அதனை டூயட் பாடலாய் கேட்டு விடவேண்டுமென்ற கோட்டி பிடித்தது.வலைதளத்தில் தேடிப் பார்த்தேன்.கிடைக்கவில்லை என்றால் விட்டு விடக்கூடிய கோட்டியா எனக்கு பிடித்தது. இல்லையில்லை.கேட்டால் தான் அடங்கும் கோட்டி அது.அவ்வேளையில் தான் உள்மனம் "நீயே உருவாக்கு" என்று உளறி, வென்றும் காட்டியது.
இப்போதெல்லாம் இரவு தூங்கு முன் ஒரு முறையாவது
 "விளையாட்டா படகோட்டி"
என்ற இந்த டூயட் பாடலை கேட்டால் தான் இந்த கோட்டிகாரனுக்கு தூக்கமே வருகிறது. தூக்கத்தில்,
இயக்குநர் :  பிரகாஷ் ராஜ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துக்குமார்
பாடகர்                     : ஹரிஹரன்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
  ஆகிய அனைவரும் உரிமை பெறாமல் இப்பாடலை இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக கனவு வருகிறது.கோட்டிக்காரன் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.