தொலைக்காட்சியில்
கோரொனா பாதிப்பு பற்றிய விபரங்களை செய்தி வாசிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்"
என்ற பாடல் வரிகள் அழைப்பு மணியாய் செல்லில் ஒலிக்க தொலைக்காட்சியின் சத்தத்தை மட்டும் நிறுத்தி விட்டு
"என்ன காலை ல யே போன்" என்றான்.
"சென்னை ல அசோகன் அண்ணன் கொரோனால இறந்துட்டாராம். அதான் சொல்லதுக்கு போன் பண்ணினேன்.வேற ஒண்ணுமில்ல வச்சிருதேன்" என அழைப்பை துண்டித்தாள் தங்கச்சி.
மீண்டும் .
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்" என ஒலித்தது செல்பேசி