ஏதோ அரவம் கேட்கவே கண் விழித்தான்.
"ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்"
என்ற வாசகம் அடங்கிய படத்தினை நேற்று ஷேர் செய்ததினால் இன்று பணப்பெட்டிகளை வரிசையாய் அடுக்கி வைக்கிறார்களோ என்ற ஓவா(ர்) ஆசையில் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.வெளிப்பக்கமாய் பூட்டியிருந்த கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் திரு டன்.
"வெளிப்பக்கமாய் பூட்டியிருக்கும் வீட்டின் வெளியில் ஒருவன் சரி. ஆனால் வீட்டிற்கு உள்ளே ஒருவன் எப்படி? யுவர் ஆனர்"
என சிந்தனை உதிப்பவர்களுக்காக
(இரண்டு மாத வாடகை பாக்கி வைத்திருக்கும் வாலிபன் வீட்டு முதலாளியிடம் இருந்து தப்பிப்பதற்காக கதவை வெளிப்பக்கம் பூட்டால் பூட்டி விட்டு சன்னல் வழியாக ஏறி குதித்து உள்ளே வருவான் என தெரிவிக்கப் படுகிறது.)
கதவை திறக்க முயன்று கொண்டிருப்பது வீட்டு முதலாளி இல்லை என்ற உடனேயே ஒரு தைரியம் வந்து சத்தமின்றி சன்னல் வழியாக குதித்து திரு டனை பின்பக்கமாக இறுக்கி பிடித்து "ஐயோ திருடன் ஐயோ திருடன் " என சத்தமாய் கத்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தனர். ஆளாளுக்கு பேசி கடைசியில் அவசர போலீஸ் க்கு போன் செய்ய ரோந்து பணி போலீசார் வருவார்கள் என்றார்கள். வரும் போலீசார்கள் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசன் வந்து வாக்குமூலம் கொடுக்கச் சொல்வார்கள் என்பதனால் தாமதமான போலீசாரின் வருகையை காரணம் சொல்லி அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்போது திரு டனும் இவனும் மட்டும். மௌனமாய் பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தது. போலீஸ் வரும்வரை ஏதாவது திருடனிடம் பேசுவோம் என நினைத்து,
யோவ் ! திருடுறதுக்கு ஏம்ய்யா என் வீட்டை தேர்ந்தெடுத்த(ாய்) ? என்றான்.
"அதா பாஸ். நேத்து "ஷேர் செய்தால் 24மணி நேரத்திற்குள் பணம் குவியும்" ங்கற படத்தை உங்க பேஸ்புக் பேஜ் ல நீங்க ஷேர் பண்ணிருந்தீங்க. அதான் குவிஞ்சுருக்கற பணத்துல கொஞ்சத்தை எடுக்கலாம் ன்னு உங்க வீட்டை தேர்ந்தெடுத்தேன் என்றான்.

செமயா இருக்குண்ணே .. இந்த மாதிரி ஷேர் செய்யவும் போஸ்ட்டை பார்த்தாலே கடுப்பாவுது.
ReplyDeleteஎத்தனை பேர் பலன் அடைந்தார்கள் என ஆதார்(ரம்) கேட்கணும் தங்கச்சி
Delete