அரசன் என்ற அச்சமின்றி கேள்வி கேட்ட கண்ணகியையும், கடவுள் என்ற கலக்கமின்றி கேள்வி கேட்ட நக்கீரரையும் போற்றுவதற்காக தம் மக்களுக்கு அவர்களின் பெயர் சூட்டி மகிழ்கிறது நம் தமிழ்நாடு.
இந்த தமிழகத்தை சார்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார்.
கர்ணனின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய இந்திய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து 08-மே -2017 அன்று இவருக்கு
( உச்ச நீந்திமன்ற நீதிபதிகள் சகதீசு சிங் கேகர், தீபக்மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்குர்,பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோரின் தீர்ப்பின்படி)
ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. ஆறு மாத சிறை தண்டனை முடிந்து 20-டிசம்பர்-2017 அன்று விடுதலை செய்யப்பட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்.
இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு பின்னர் 11-ஜனவரி-2018 அன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பினார் கர்ணன்.
அதன் மறுநாள் 12-ஜனவரி-18 அன்று ,நீதிபதி கர்ணனின் செயலுக்கு தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சலமேஸ்வர்,ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோக்குர், பி.சி.கோஸ் குரியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை.சில மாதங்களாக விரும்பத்தகாத சில விசயங்கள் நடைபெறுகின்றன என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை (உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முதலாக ) கூட்டி அறிவித்துள்ளனர்.

நீதிபதி கர்ணன் செய்தது தவறு என்றால் இது தவறாகாதா?
அல்லது
இவர்கள் செய்தது சரியென்றால் நீதிபதி கர்ணன் செய்ததும் சரிதானே?
அதற்காக வழங்கப் பட்ட சிறை தண்டனையை என்ன செய்ய?
சபாஷ்...சரியான கேள்வி...
ReplyDelete√
Delete