twitter

Wednesday 19 January 2011

சண்டையா? சேக்காயா?

                    தமிழர்களுக்கு இந்தி பேச தெரியாது.தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற வார்த்தை என்னை அவர்கள் பக்கம் இழுத்தது.தமிழர்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான அவசியம் என்ன ?என்று நான் கேட்டதற்கு, இந்தி இந்தியாவின் தேசிய மொழி அதனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதில் வந்தது.
                இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்றேன் நான்.அப்படியென்றால் இந்தியாவின் தேசியமொழி என்ன? என்றார்கள் அவர்கள். இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது என்றேன் நான்.தேசியக் கொடி, தேசிய கீதம்,தேசிய பறவை,தேசிய விலங்கு,தேசிய மலர்,தேசிய விளையாட்டு,தேசிய பாதுகாப்பு சட்டம் என்றெல்லாம் இருக்கும் போது தேசிய மொழி எப்படி இல்லாமல் இருக்கும்.உனக்கு தெரியவில்லை அதனால் தான் இப்படி சொல்கிறாய் என்றார்கள் அவர்கள்.எனக்கு தெரிந்ததனால் தான் சொல்கிறேன்.இந்தி இந்தியாவின் அலுவலக[official language] மொழிகளில் ஒன்று.ஆங்கிலம்,இந்தி மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி ஆகிய மூன்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக செயல் படுகிறது என்றேன் நான்.இந்தியை தேசிய மொழியாக ஏன் வைக்கக்கூடாது? என்று கேள்வியெழுப்பினார்கள் அவர்கள். பல மன்னர்களின் ஆட்சியில் இருந்த நாடுகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.அந்நாடுகளில் வெவ்வேறு இன மக்கள் வாழ்ந்தார்கள்.அவர்களின் மொழிகள்,கலாச்சாரம் வெவ்வேறானவை.சுதந்திரத்திற்கு பின் அவற்றை ஒருக்கிணைக்கும் போது ஒரு மொழிக்கு தேசிய மொழி என்ற அங்கீகாரம் கொடுத்தால் மற்ற மொழிகள் அழிந்து விடும் அபாயம் ஏற்படும்.எந்த ஒரு மொழியும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு தேசிய மொழியே வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் என்று பதிலளித்தேன் நான்.இல்லை இல்லை நீ சொல்வது தவறு.இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதற்கு ஆதாரம் கொடு என்றார்கள் அவர்கள்.இல்லாத ஒன்றுக்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும் என்பதனால் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்பதற்கு நீங்கள் ஆதாரம் கொடுங்கள் என்றேன் நான்.வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப்பாருங்களேன் என்றேன்.தேடிப்பார்த்தார்களா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் அன்றிலிருந்து என்னை பகையாளியாய் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை விடுங்கள்.அவர்கள் வேற்று மாநிலத்துக்காரர்கள். வேற்று மொழி பேசுபவர்கள்.தமிழர்களாகிய நீங்கள் சொல்லுங்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழியா? இல்லையா? என்று.Whether Hindi is India's National Language? or Not?.என்று.அவர்கள் சொல்வதில் உடன்பாடா? அல்லது நான் சொல்வதில் உடன்பாடா?என்று. என்னோடு சண்டையா?சேக்காயா?என்று.நான் பகையாளியா? சேக்காளியா? என்று
தொடர்புடைய பதிவுகள்
1.http://nagainthu.blogspot.com/2012/07/blog-post.html
2.http://thamizvinai.blogspot.in/2012/09/blog-post_23.html