twitter

Tuesday, 29 November 2011

மலையாளியின் கவலை

               குவைத்தில் வசிக்கும் மலையாளி ஒருவர் பெரியார் அணை உடைந்தால் தன் மாநில மக்கள் பாதிக்கப் படுவார்களே என்பதை விட தமிழர்களாகிய நாம் அவர்களை பார்த்து சிரிப்போம் என்ற கவலையில் கீழ் கண்டவாறு கேரள மக்களுக்கு வலைமனையி(internet)ல் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.அணை உடைந்து அவர்களை பார்த்து சிரிப்பதற்கு முன்பே இவரின் கவலையை நினைத்து சிரிப்பு வருவதை என்னால் அடக்க முடியவில்லை. உங்களுக்கு
Advt # : 479765
posted by Sebin
Location Salmiya

Dont invest in property in Kochi/Trissure/Idukki for time being.
Beware!!!!!!!

It is a very confidential news which leaked out from officials.

Don’t investment money on buying houses or villas in Ernakulam / Kochi District areas for sometimes. Because Mullaperiyar Dam’s situation is very bad as 50/50. Something can happen or may not. Once the Dam is broken, the EKM will be the first amongst other three districts which will be completely covered by water!!!!!!

Once you drown in water, Tamil people will be laughing at me and they will " pooontu vilayadum”.
So "Jagrathai."
http://www.indiansinkuwait.com/myIIK/ShowAdvt.aspx?ID=479765

Friday, 4 November 2011

வேரானவள் வேறானாள்(ல்)


திரை உலகை
திரள வைத்த சாவு
உன்னை மட்டும்
குழற வைத்த சாவு


சாகாவரங்கள் உன்
இணைக்கல்ல
இசைக்கே


வேரானவள்
வேறானாள்(ல்) என்ன
விழுதுகள் எப்போதும்
உனை தாங்கி நிற்கு(போ)ம்

ஜீவா சென்றாள்(ல்) என்ன
அவள் ஜீவன் உன்னோடுதானே

ராசாவே

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்

ஒரு ஜீவன் அழைத்தது

எங்கே என் ஜீவனே


போன்ற உன் குரல்களையே உனக்கு ஆறுதலாக சொல்லும்


நேரில் வர முடியாத
சேக்காளி

Thursday, 3 November 2011

உதவி

வாசல் வரைக்கும்  செல்ல
சொந்த வாகனங்கள்
உதவத்தான் செய்கிறது
         
                ஆம்

மருத்துவமனையின்
வாசலுக்கும் கூட.

Tuesday, 11 October 2011

கற்பனைத்து


இந்த இடுகையை எழுத காரணமாயிருந்த தோழர் திரு மபா அவர்களுக்கு நன்றி     
//சேக்காளி, ஏன் தொடர்ந்து எழுதவில்லை....?
தொடர்ந்து எழுதவும். தொய்வில்லாமல் எழுதவும்//
என்று தமிழன் வீதியை சேர்ந்த தோழர் மபா கேட்டிருந்தார்.
"ஆசைதான். ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது.சோம்பேறி தனமாக கூட இருக்கலாம். ஊக்கப் படுத்துவதற்கு நன்றி."அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்". என்ற தலைப்பில் ஒரு சிறிய பதிவு எழுதலாம் என இருக்கிறேன்.தலைப்பு கவரும் படி இருக்கிறதா?.எதைப் பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (கற்பனை செய்து) எனக்கு "பதிலாகவோ" அல்லது உங்களின் பதிவாகவோ தெரிவியுங்களேன்".என்று அவருக்கு பதிலளித்து விட்டேன்.
                        அப்புறம் தான் யோசனை வந்தது. இதனையே ஒரு பதிவாக வெளியிட்டால் என்னவென்று. 
                         நண்பர்களே நீங்களும் "அவள் ஒரு தொடர்கதை - அன்னை ஓர் ஆலயம்" எதனை பற்றியதாக இருக்கும் என்று கற்பனைத்து (இந்த கட்டுரைக்கும் தலைப்பிற்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டேன்)எனக்கு பின்னூட்டமாகவோ அல்லது உங்களின் பதிவுகளாகவோ வெளியிட்டு வலையுலகை பற்றி எரிய செய்யுங்களேன்.
ஊக்கம்: தோழர் மபா, தமிழன் வீதி 
ஆக்கம்: நாந்தான் உங்க சேக்காளி.

Thursday, 25 August 2011

அன்னா ஹஜாரேவை ஆதரிக்க சென்றவர் சுட்டு கொலை


சுதந்திர தினத்துக்கு அடுத்த நாள் அன்னா ஹஜாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப் புறப்பட்ட சமூகப் போராளி ஷீலா மசூத்தை அவரது காரில் வைத்தே சுட்டு கொன்று விட்டார்கள்.மத்திய பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்கத்தை எதிர்த்து போராடிய காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிந்தாலும்,காரணம் தெரியவில்லை என்று கை விரிக்கிறது போலீஸ்.
இத்தனைக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்திருக்கிறார் ஷீலா மசூத்.லஞ்சத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற புறப்பட்ட ஷீலா மசூத்தை காப்பாற்ற நம் சனநாயகத்தால் முடியவில்லை.இந்தியாவெங்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு அநியாயங்களை எதிர்த்து போராடியதற்காக மரணமடைந்திருக்கும் 12வது நபர் ஷீலா மசூத்.
நன்றி
கழுகார் பதில்கள்.
24-ஆகஸ்டு-11 ஜூனியர் விகடன்.
மேலும்http://www.inneram.com/2011081718445/ips-officer-behind-rti-activist-masood-murder
http://www.sivajitv.com/news/bopal-hasaray-aatharavaalar-murder.htm

Wednesday, 10 August 2011

திரையில் வருமுன் "மங்காத்தா" வலையில் - MANKATHA

              உச்ச நட்சத்திரத்தின் வாரிசு மகளுக்கு திரைப்படம் தயாரிக்கும் ஆசை வந்தது.அதனை இயக்க அவள் தேர்ந்தெடுத்த இயக்குநர் முதல் பாடலுக்கே தேசிய விருது பெற்ற பாடலாசிரியரின் மகன்.அந்த இயக்குநர் தனது படத்திற்கு இசையமைப்பாளராய் தேர்ந்தெடுத்தது இசையின் இளைய மைந்தனை.இத்தனை உச்ச வாரிசுகளுக்கும் நடுவில் கதாநாயகன் எந்த வித பின்புலமும் இல்லாமல் திரையில் அறிமுகமாகி இந்த படத்தில் தனது அரை சதத்தினை கடக்க இருக்கும் ஆசை நாயகன்.இந்த கலவையில் படத்தின் மதிப்பு எகிறவே அப்போது ஆண்டவனின் வாரிசு பார்வையை மாற்றியது இந்த திரைப்படத்தின் மேல்.
               உள்ளே வெளியே நடைபெற்ற மங்காத்தாவில் உச்ச நட்சத்திர வாரிசு மகளின் பெயர் சத்தமின்றி தயாரிப்பாளர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டது.ஆண்டவனின் வாரிசு என்பதால் மட்டுமே அது தயாரிப்பாளர் பெயராய் சேர்க்கப் பட்டது.
இங்கே "இது அம்பானி பரம்பரை" என்ற இந்த பாடல் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்பட்ட வர்க்கத்திற்கும் நடைபெற்ற மங்காத்தாவில் ஆண்ட வர்க்கம் அதிரடியாய் ஆட ஆளப்பட்ட வர்க்கம் அமைதியாய் ஆடி அரியணையை, "இலவசமாய் அரிசி தருகிறேன் என்ற அரசி" யிடம் ஒப்படைத்தது.
நாளை, இன்று இப்போது என பாடல்கள் வெளியிடப்படும் நாளை ஒருவாறாக முடிவு செய்து அறிவித்த பின் "நான் கொண்ட கொள்கையிலிருந்து எப்போதும் மாறுவதில்லை.எனவே பாடல் வெளியீட்டு விழாவிற்கெல்லாம் வர மாட்டேன்" என்று தலை ஆடியது மங்காத்தா.

இது ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க இசையின் வாரிசு அமைதியாய்
                    1.ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு மக்கள் நாடித்துடிப்பை கண்டது.
                     2. அடுத்து பாடல் விபரங்கள் அடங்கிய குறுந்தகட்டின் உறையை மட்டும் வெளியிட்டு மக்களிடையே பாடல் கேட்கத் தூண்டும் ஆவலை உயரச்செய்தது.
                   தலை ஆடிய மங்காத்தாவினால் அமைதியான முறையில் பாடல் நேரிலும்,தபால் மூலமாகவும் வெளியானாலும் அதிவிரைவாய் மக்களிடையே பரவும் வதந்திகளை விட வேகமாய் இணையத்தில் வெளியாகி விட்டது.
              இந்நிலையில் படம் வெளியாகப் போகும் நாள் அறிவிக்கப்பட்டது.ஆனாலும் அந்நாளில் படம் வெளியாகுமா? என்ற ஆவல் படக்குழுவினரோடு,திரையுலகத்தினரோடு, ரசிகர்களுக்கும் தான்.
                                                                        காரணம்
"இலவச அரிசி தந்த அரசி"யின் ஆட்சியில் "ஆண்டவன் வாரிசு" தயாரித்த படம் வெளி வருமா?
அதுவரை விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா

Thursday, 28 July 2011

ஃபேஸ் புக் - வேறு பார்வை

                            இன்று பெரும்பாலான பதிவர்கள் "ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது "முகநூல்" என்று குறிப்பிடுகிறார்கள். Booking (Book) என்பதற்கு பதிவு என்ற பொருளும் உண்டு. ஆகையால் நாம் "முக பதிவு" என்று "Facebook" ஐ கூறலாம் அல்லவா?.
கருத்து சொல்லுங்கள்.ஏற்புடையதாய் இருந்தால் தெரிந்தவர்களிடமெல்லாம் பரப்புங்கள்.

Friday, 15 July 2011

01-நிலவோசை

நிலவின் ஒளியை நாம் எல்லோரும் ரசித்திருப்போம்.
அதே போல் நிலவிற்கு ஒலி இருந்திருந்தால் இப்படி இருக்குமோ? என்ற கற்பனையில் உங்களுக்காக

நாமெல்லோரும் உயந்த உள்ளம் படத்தில் இடம் பெற்ற "எங்கே என் ஜீவனே" பாடலை
இளையராஜாவின் தனிகுரலிலும், ஜேசுதாஸ் - ஜானகி குரலில் இணையாகவும் கேட்டிருப்போம்.அந்த பாடல் இளையராஜா - ஜானகி குரலில் இணையாக ஒலித்தால் !!!
கேட்டு பாருங்களேன்.


__________________________________________________________________________________

Tuesday, 12 July 2011

மங்காத்தா - சுடப்பட்ட கதையின் ஒரிஜினல்

வலைப்பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த போது பால்ய கால வாசிப்புகளை மீட்டெடுக்கும் விதமாக "விக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை" படித்தேன்.நடைதான் விக்கிரமாதித்யனும் வேதாளம் போன்றது ஆனால் கதை படித்து பாருங்களேன்.


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தினை பற்றி இழுத்து, தன் முதுகில் சுமந்து கொண்டு அந்த அடர்ந்த வனத்திலே நடக்கத் தொடங்கினான். வழக்கத்திற்கு மாறாக வேதாளம் மௌனமாக இருந்தது.

"என்ன வேதாளமே ! என்ன பேச்சையே காணோம். இந்த முறை கதையும் வினாவும் இல்லையா"

" அது எப்படி ! நிச்சயம் உண்டு; கவனமாகக் கேள்

புண்ணிய தேசமென்றே பெயர் கொண்ட நாடு அது. அது பல குறுநில இராஜ்ஜியங்களைச் சேர்த்து அமைந்த ஒரு பரந்த தேசம். அந்த தேசத்தினை மனமோகன் என்ற ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்ல குறு நிலத்து அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளாக அமைச்சர்களை அனுப்புவது வழக்கம். அப்படியாக தென் பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி தன் சார்பாக இரண்டு பிரதிநிதிகளை மனமோகனுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்களாக அனுப்பியிருந்தான். ஒருவன் பெயர் பெரம்பலூரன் மற்றொருவன் பெயர் சூரியப்பேரன்.


அந்த் நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு வழக்கம் இருந்தது. மக்கள் தாங்கள் தகவல் அனுப்ப தேவையான புறாக்களை இராஜ்ஜியத்திடம்வாடகைக்குப் பெற வேண்டும். இந்நிலையில் சில வர்த்தகர்கள் தாங்களும் புறாக்கள் வளர்ப்பதாகவும் செய்தி சுமக்கும் புறாக்களாக அவை இருப்பதாகவும் அவற்றினையும் மக்கள் வாடகைக்கு துய்த்து பயன் பெறச் செய்தால்

இராஜ்ஜியத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமெனவும் கருத்து சொல்லியிருந்தனர். இதனை ஏற்பதால் இராஜ்ஜிய கஜானாவுக்கு வருமானம் தடைப்படும் என மனமோகன் யோசித்தான்.

அமைச்சனான சூரியப் பேரன் மனமோகனிடம், "அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களையும் செய்தி சுமக்கும் பணியில் அமர்த்தினால் கஜானாவுக்கு ஆபத்து உண்டாகும் என தாங்கள் அஞ்ச வேண்டாம். இதற்கு ஒரு உபாயம் இருக்கிறது. தாங்கள் ஆணையிட்டால் நான் விளக்குகிறேன்"

இந்த அணுகுமுறை மனமோகனுக்கு மகிழ்சி தருவதற்குப் பதில் கலக்கத்தையே தந்தது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி அனுப்பும் பிரதிநிதிகள் கஜானா எனும் சொல்லை உச்சரிக்கும் போதே அவர்கள் கண்களில் ஒரு ரகசிய வெறி தெரிவதை மனமோகன் பல முறை கண்டிருக்கின்றான்.

அதுவும் புண்ணிய தேசத்தின் கடல்பரப்பில் பெருங்கப்பல்கள் வந்து செல்ல புது திட்டம் என அந்த மதுக்கூரன் எனும் அமைச்சர் கொண்டு வந்த திட்டமும் அதில் கஜானா பட்ட பாட்டையும் மனமோகனால் மறக்க இயலவில்லை.

ஆனாலும் தட்சிணாமூர்த்தியின் தயவு மனமோகனுக்கு அவசியமாக இருந்தது.

சரி சொல சூரியப் பேரா என சொல்லிவிட்டான்.

அரசே வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை இராஜ்ஜியத்திடம் தத்து தந்து விடட்டும். அவர்கள் புறா வழி மக்கள் செய்திகளை அனுப்புவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயம் செய்வோம். அதில் கணிசமான பங்கினை நாம் எடுத்துக் கொண்டு மீதியை வர்த்தகர்களுக்குத் தருவோம். உங்கள் சம்மதம் மட்டும் போதும் என்னிடம் பொறுப்பை தாருங்கள் நான் இதனை செம்மையாக நடத்துகிறேன் என்றான் சூரியப் பேரன்

அவன் செம்மையாக என அழுத்திச் சொன்னது மனமோகனுக்கு மிகவும் கலக்கமாக இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

மனமோகன் ராஜாங்கத்துக்கு ஒரு இராஜ மாதா இருந்தார். அவள் மனமோகனின் தாயார் இல்லை. மனமோகன் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பினை ஏற்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு புண்ணிய தேசத்தினை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனது தர்ம பத்தினி தான் இப்போதைய இராஜ மாதா. அந்த மன்னன் காலமானபின்பு அவனின் தர்மபத்தினிக்கு மன்னனின் விதவை எனும் மரியாதை இருந்து வந்தது. அவளும் இராஜாங்க காரியங்களில் சில சமயம் தலையிட்டு வந்தாள். ஆனால் இடையில் ராஜாங்கத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களால்
அவள் இராஜா மாதா ஆவது தான் சிறந்தது என சில ஜோதிடர்கள் சொல்லி விட்டனர். அவளும் இராஜ மாதா ஆகிவிட்டார். இப்போது மனமோகன் பெயருக்குத் தான் மன்னன். அவனை ஆட்டுவிப்பது இந்த இராஜ மாதா தான் என அரண்மனையின் முற்றம் தொடங்கி தேசத்தின் தென் கோடி எல்லையில் இருக்கும் சாமான்யன் வரை எல்லோரும் சில சமயம் அரசல் புரசலாகவும் பல முறை பட்டவர்த்தனமாக வெளிப்படையாகவும் பேசிக் கொண்டனர். இதில் ஓரளவு உண்மையும் இருந்தது. மனமோகன் சூரியப் பேரனின் பேச்சைக் கேட்டு புறாக்கள் திட்டத்தை செயலாக்கி விட்டால் இராஜ மாதாவிற்கு யார் பதில் சொல்வது என்ற கலக்கம் தான் மனமோகனுக்கு ; இதனை சமாளிக்க மனமோகன் ஒரு யுத்தி செய்தான். தென்பகுதி குறுநில மன்னன் தட்சிணா மூர்த்தி, தான், சூரியப் பேரன், இராஜ மாதா இவர்கள் சந்தித்துப் பேசுவது எனவும் அவர்களுக்குள் இந்த புறாத் திட்டம் தொடர்பாக ஒரு சமரச ஒப்பந்தம்
செய்வது எனவும் திட்டமிட்டான். அப்படியே சந்திப்பும் நடந்தேறியது. சமரச ஒப்பந்தமும் உண்டானது.

வர்த்தகர்கள் தங்கள் புறாக்களை மக்கள் பயன்படுத்த ஏதுவாக புறாக்களை வழங்குவது., மக்களிடம் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் கஜானாவிற்கு இவ்வளவு, புறா வழங்கிய வர்த்தகர்களுக்கு இவ்வளவு என விகிதாச்சாரமும் முடிவானது. இதனை மேற்பார்வை செய்யும் பொறுப்பு சூரியப் பேரனுக்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டம் செயலுக்கு வந்த உடன் புதிது புதிதாக புறா வளர்க்கும் வர்த்தகள் புற்றீசல் போல முளைத்தனர். தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் சூரியப் பேரனின் அரண்மனையினை மொய்க்கத் தொடங்கினர். சூரியப் பேரன் தன்னை அமைச்சனாக்கிய தட்சிணா மூர்த்திக்கு நன்றிக் கடன் பட்டவன். ஆகவே புதிய வர்த்தகர்களை திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அவர்கள் தட்சிணா மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமானால் மட்டுமே சாத்தியம் என சொல்லி விட்டான். இதனால் தட்சிணா மூர்த்திக்கு புறா வளர்க்கும்
வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு பல மடங்கு பெருகியது. அதனை அவனும் செம்மையாக பயன்படுத்திக் கொண்டான். சூரியப் பேரனாகப் பட்டவன் தட்சிணா மூர்த்தியின் உறவினனுமாவான். இவர்கள் குடும்ப உறவில் ஒரு சிக்கல் உதித்தது. சூரியப் பேரன் தட்சிணா மூர்த்தியின் அன்பை இழந்தான். அவனுக்கு இந்த புறாத் திட்டம் கண்காணிக்கும் பொறுப்பும் கை நழுவியது.

தட்சிணாமூர்த்தியிடம் நீண்ட காலம் விசுவாசமாக் ஓர் அடிமை போல உழைத்த பெரம்பலூரனுக்கு தட்சிணா மூர்த்தியின் கடைக் கண் கருணை கிட்டியது. புறாத் திட்டப் பொறுப்பு பெரம்பலூரன் வசம் வந்தது

புண்ணிய தேசத்தின் நீதி பரிபால முறையில் ஒரு நல்ல அம்சம் இருந்தது. நீதி வழங்க அமர்த்தப்படும் குருமார்கள் அரசுக்கோ அரசனுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்லர்.அவர்களுக்கு அரசனையே கேள்வி கேட்கவும் ஏன் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது புண்ணிய தேசத்தில் ஒரு புகழ்பெற்ற விதூஷகன் இருந்தான் . அவன் பெயர் சேவல்கொடி. அவன் பேச்சைக் கேட்டால் கோமாளி போலத் தோன்றும் ஆயினும் மிகச் சிறந்த அறிஞன். அவனுக்கு இந்தப் புறாத் திட்டத்தில் சூரியப் பேரன், மனமோகன், இராஜ மாதா, பெரம்பலூரன், தட்சிணா
மூர்த்தி,எல்லோரும் கஜானவுக்கு வரும் வருமானத்தில் ஏதோ சூது செய்வதாக ஐயம் தோன்றிவிட்டது. கொஞ்சமும் அச்சமின்றி மனமோகனையே நீ தானே அரசன் புறாத் திட்டத்தில் இராஜ்ஜியத்திற்கு வர வேண்டிய வருமானம் எங்கோ களவு போகிறது போல சந்தேகம் கொள்கிறேன். உண்மையைச் சொல் எனக் கேட்டு விட்டான். மனமோகனுக்கு உள்ளூர கலக்கம்.

ஆயினும் காட்டிக் கொள்ளாமால், அப்படியெல்லாம் ஏதுமில்லை நீ உளறுகிறாய் எனச் சொன்னான். சேவல் கொடி பிடிவாதமாக சூரியப் பேரனையும் பெரம்பலூரனையும் விசாரித்துப் பார் எனச் சொன்னான். மனமோகனின் கலக்கம் அதிகமானது. ஆனாலும் அவன் தனது பிடி வாதத்தில் தளரவில்லை.

சேவல்கொடி பொறுத்துப் பார்த்து ஒரு நாள் நீதிபரிபாலன குருமார்களிடமே முறையிட்டு விட்டான்.

குருமார்கள் இதனை என்னவென்று விசாரியுங்கள் என இராஜாங்கத்தின் பிரத்தியேக காவலர்களுக்கு ஆஞ்ஞை செய்தார்கள்.

பிரத்தியேகக் காவலர்கள் ஆய்ந்து விசாரணை செய்து

புறா வழங்க வர்த்தகர்கள் தேர்வானதில் சூது
புறா கட்டணம் வசூலில் சூது என இதில் பலவாறாக சூது நடந்திருக்கிறது என சொன்னார்கள்

மனமோகன் கலக்கமடைந்து சூரியப் பேரனையும், பெரம்பலூரனையும் காரக்கிருஹத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என காவலர்களிடம் சொல்லிவிட்டான்.

காரக்கிருஹம் செல்வதற்கு முன்பு இருவரும் ஆலயத்திற்கு சென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது அங்கே கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து சொன்னார்கள்

நாங்கள் என்ன செய்தாலும் அதை அரசனிடமும் இராஜ மாதாவிடமும் சொல்லி விட்டுத்தான் செய்தோம். அவர்களுக்கு தெரியாமல் ஏதும் செய்யவில்லை

இப்போது விக்கிரமாதித்யா உனக்கு கேள்வி. அரச தர்மம் , இராஜ நீதி இதில் எல்லாம் சிறந்தே நீ உஜ்ஜையினியில் நீ இராஜ்ய பரிபாலனம் செய்கிறாய் ஆதலினால் இந்த கேள்வி கேட்கிறேன். பதில் சொல். இராஜ்யத்தில் பரிபாலனம் செய்யும் அமைச்சர், தளபதிகள், சேனாதிபதிகள் இவர்களின் தவறுகளில் இராஜ்யாதிபதிக்கு பங்கு இருக்கிறதா. இங்கே இந்தக் கதையில் மனமோகன் நடந்து கொண்டது சரியா. இதற்கு சரியான விடை தெரிந்தும் உரைக்காது இருப்பாய் என்றாலும் அல்லது தவறான விடை சொன்னாலும் உனது சிரம் சுக்கல் நூறாக வெடிக்கும்"

விக்கிரமாதித்யன் பதிலுரைக்கத் தொடங்கினான்

" இராஜ்ஜியத்திற்கு துன்பம் என வரும் போது அரசனாகப்பட்டவன் பிறரை விடுவித்து தனனை இரையாக்கவும் தயங்கலாகது. ஒரு கப்பலில் படையினர் பயணம் செய்கையில் கப்பல் மூழ்கிவிடும் எனம் அபாயக் காலத்தில் கப்பலின் தலைவனானவன் பிறரை தப்பிக்க வைத்து தான் மிகக் கடைசியாகவே தப்பிக்க முயல வேண்டும். தேவையெனில் பிராணத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்க வேண்டும்.

இராஜ்ஜிய பரிபாலத்தில் பிழை என்றும் ஒழுங்கில் குறை எனவும் வருமேயாயின் அதன் முதல் பொறுப்பினை அரசனே ஏற்பது இராஜ தர்மம் ஆகும். தனது சேனையினைச் சேர்ந்தவர், மந்திரிமார்கள் பிழையிழைத்தாலும் அதன் பொறுப்பு அரசனுக்கே உரியது. அரசனை ஒட்டிதான் இராஜ்ஜிய பரிபாலனம் நிகழ்கிறது. அரசனே சேனைகளை வழி நடத்துகிறான். அமைச்சர்களை கவனிக்கிறான், கண்கானிக்கின்றான். பிரஜைகள் அரசனை தங்களை துன்பத்திலிருந்து ரட்சிக்கும் தெய்வமாகவே மதிக்கின்றார்கள். ஆகவே ஒரு இராஜ்ஜியாதிபதிக்கு
சாதாரண பிரஜையினைக் காட்டிலும் இராஜ்ஜிய சேவையில் பொறுப்பு அதிகமாகிறது. அதன் பொருட்டே அவனையும் அவனது குடும்பத்தாரையும் காத்து நிற்கும் சேனைகளும் சேவகர்களும் அரசனுக்கு ஆபத்து வரும் போது பிராணத் தியாகம் செய்தும் அரசனைக் காக்கின்றார்கள்.

இராஜ்ஜியத்தின் பொறுப்பு என நோக்கும் போது மனமோகன் தனது அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொறுப்பேற்பதே முறையாகும். அவனுக்கு அரசனாக பொறுப்பில் தொடர்ந்து இராஜ்ஜிய பரிபாலனம் செய்ய அருகதை இல்லை என்றே சொல்கிறேன். அவனுக்கு நீதி பரிபாலனம் செய்யும் குருமார்கள் இதனையே புத்திமதியாகச் சொல்லியிருக்க வேண்டும். அன்றி மனமோகன் குருமார்கள் மீது மதிப்பு வைத்திருப்பானேயாகில் தானே முன் வந்து முடி துறக்க வேணும்"

விக்கிரமாதித்தியனின் இந்த சரியான பதிலால் உவகை அடைந்த வேதாளம் அவனது முதுகை விட்டு அகன்று பறந்து மீண்டும் அதே மரத்தில் தொங்கியது.
இட்டது: சந்திரமௌளீஸ்வரன்.
சுட்டது: சேக்காளி

Wednesday, 19 January 2011

சண்டையா? சேக்காயா?

                    தமிழர்களுக்கு இந்தி பேச தெரியாது.தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற வார்த்தை என்னை அவர்கள் பக்கம் இழுத்தது.தமிழர்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான அவசியம் என்ன ?என்று நான் கேட்டதற்கு, இந்தி இந்தியாவின் தேசிய மொழி அதனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதில் வந்தது.
                இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்றேன் நான்.அப்படியென்றால் இந்தியாவின் தேசியமொழி என்ன? என்றார்கள் அவர்கள். இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது என்றேன் நான்.தேசியக் கொடி, தேசிய கீதம்,தேசிய பறவை,தேசிய விலங்கு,தேசிய மலர்,தேசிய விளையாட்டு,தேசிய பாதுகாப்பு சட்டம் என்றெல்லாம் இருக்கும் போது தேசிய மொழி எப்படி இல்லாமல் இருக்கும்.உனக்கு தெரியவில்லை அதனால் தான் இப்படி சொல்கிறாய் என்றார்கள் அவர்கள்.எனக்கு தெரிந்ததனால் தான் சொல்கிறேன்.இந்தி இந்தியாவின் அலுவலக[official language] மொழிகளில் ஒன்று.ஆங்கிலம்,இந்தி மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி ஆகிய மூன்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக செயல் படுகிறது என்றேன் நான்.இந்தியை தேசிய மொழியாக ஏன் வைக்கக்கூடாது? என்று கேள்வியெழுப்பினார்கள் அவர்கள். பல மன்னர்களின் ஆட்சியில் இருந்த நாடுகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.அந்நாடுகளில் வெவ்வேறு இன மக்கள் வாழ்ந்தார்கள்.அவர்களின் மொழிகள்,கலாச்சாரம் வெவ்வேறானவை.சுதந்திரத்திற்கு பின் அவற்றை ஒருக்கிணைக்கும் போது ஒரு மொழிக்கு தேசிய மொழி என்ற அங்கீகாரம் கொடுத்தால் மற்ற மொழிகள் அழிந்து விடும் அபாயம் ஏற்படும்.எந்த ஒரு மொழியும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு தேசிய மொழியே வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் என்று பதிலளித்தேன் நான்.இல்லை இல்லை நீ சொல்வது தவறு.இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதற்கு ஆதாரம் கொடு என்றார்கள் அவர்கள்.இல்லாத ஒன்றுக்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும் என்பதனால் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்பதற்கு நீங்கள் ஆதாரம் கொடுங்கள் என்றேன் நான்.வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப்பாருங்களேன் என்றேன்.தேடிப்பார்த்தார்களா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் அன்றிலிருந்து என்னை பகையாளியாய் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை விடுங்கள்.அவர்கள் வேற்று மாநிலத்துக்காரர்கள். வேற்று மொழி பேசுபவர்கள்.தமிழர்களாகிய நீங்கள் சொல்லுங்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழியா? இல்லையா? என்று.Whether Hindi is India's National Language? or Not?.என்று.அவர்கள் சொல்வதில் உடன்பாடா? அல்லது நான் சொல்வதில் உடன்பாடா?என்று. என்னோடு சண்டையா?சேக்காயா?என்று.நான் பகையாளியா? சேக்காளியா? என்று
தொடர்புடைய பதிவுகள்
1.http://nagainthu.blogspot.com/2012/07/blog-post.html
2.http://thamizvinai.blogspot.in/2012/09/blog-post_23.html