twitter

Thursday, 11 December 2014

டச் ஸ்கின்

டச் ஸ்கிரீன் கேள்விப் பட்டிருப்பீர்கள்

அதென்ன டச் ஸ்கின்?.

"டச் ஸ்கின்" என்பது  "டச் ஸ்கிரீன்" என்பதை எழுதும் போது ஏற்பட்ட எழுத்துப்பிழை என நினைக்காதீர்கள்.

புதிதாய் வந்துள்ள தொழில்நுட்பம்.
மொழிபெயர்ப்பு மட்டும் எனது மதி நுட்பம்.

டச் ஸ்க்ரீன் என்னும் தொடு திரை போன்,டேப்களைப் போல் டச் ஸ்கின் என்னும் தொடு தோல் போன்கள் வந்துள்ளன.

அப்டின்னா?


              கை சங்கிலி போன்ற ஒன்றை கையில் அணிந்து கொண்டு (கை சங்கிலின்னா கையில அணிவது தானேன்னு கேக்கப்பிடாது) கையை ஒரு திருப்பு திருப்பினால் அதிலிருந்து ஒளி நம் கையில் விரிகிறது. காண்பதற்கு சினிமா புரொஜெக்டரிலிருந்து வெளிவரும் ஒளியைப் போல் சிறிய அளவில் காணப்படுகிறது. திரையாக நம் கை.
               வெளி வரும் ஒளியிலிருந்து பட்டன்களும்,முத்திரைகளும்(LOGOS) நம் கையில் விரிகின்றன. மற்றொரு கையின் விரல் கொண்டு பட்டன்களை தொட்டால் டச் ஸ்கிரீன் மொபைல் போன்களைப் போல்  தன் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறது.
"ராத்திரி சரக்கடிச்சுட்டு தமிழ் பேசும் ஆங்கில படம் பா(ர்)த்து விட்டு அப்புறமா வந்த கனவை கண்டு இப்படி எழுதியிருக்கிறேன்"
 என நீங்கள் நினைத்தால் நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
"அப்போ சரியா எப்படி நினைக்க வேண்டும்" என்றால் எழுதியுள்ள அத்தனையும் Youtube ல் கண்டது.
எப்படி என்பது

ரு
சி
றி
ய 
இடைவேளைக்கு பின்பு

மூல ஆதாரம் :http://www.cicret.com/wordpress/?page_id=17920Youtube (தமிழ் மொழி பெயர்ப்பு தப்பான அர்த்தம் தருகிறது)ஆதாரம்:

துப்பு :Sureshpanel Sp
https://www.facebook.com/groups/304559716412549

Thursday, 31 July 2014

என்னங்க! ஏதாவது சொல்லிட்டு போங்க

30 - ஜுலை - 14 அன்று சென்னை ஹலோ எப்எம் http://hello.fm/liveStream1.aspx கேட்டுக் கொண்டிருந்தேன்.அதில் மத்திய அரசு பணிகளுக்காக யுபிஎஸ்சி(UPSC) ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam) கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதை பற்றி நேயர்களிடம் கருத்து கேட்டு நேரடி ஒலிபரப்பு செய்தார்கள்.
          அதில் ஒருவர், மத்திய அரசு பணியானது தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் ஆற்றவேண்டிய ஒன்று.எனவே பிற மாநிலங்களில் சென்று பணியாற்ற ஆங்கிலம் அத்தியாவசியமானது என்றார்.
          இன்னொரு பெண்மணி,தனது மகள் மத்திய அரசு பணிகளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும்,அவள் மற்றும் அவளைப் போன்று அத்தேர்வு எழுத முனைபவர்கள் ஆங்கில வழி கல்வியே பயின்று வருவதால் ஆங்கிலத்தினாலான தேர்வுகள் சரிதான் என்றார்.
           இதைக் கேட்ட போது எனக்கும் அவர்களிருவரும் சொல்வது சரியென்றே தோன்றியது.ஆனால் இன்னொருவர் சொன்ன கருத்து அந்த எண்ணத்தை மாற்றியது.
          முதலில் அவர் அவரை அறிமுகப்படுத்தும் போது இது போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றில் சில வருடங்கள் பணியாற்றியதாக தெரிவித்துக்கொண்டார்.
           அடுத்து அவர் அது போன்ற தேர்வுகள் பற்றிய விபரங்களைச் சொன்னார்.அத்தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதித்தறிய தனித்தேர்வு இருப்பதாக தெரிவித்தார்.
              மேலும் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் வினாவை தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இந்தி தாய்மொழியாக இல்லாத ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது.எனவே இந்தி தெரிந்தவருக்கு வழங்கப்படும் அந்த வாய்ப்பு இந்தி தெரியாத அனைவருக்கும் மறுக்கப் படுகிறது.எனவே அந்த வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப் பட அவரவர் தாய்மொழியிலும் வினாத்தாள் இருக்க வேண்டியது அவசியமே என்றார்.எனக்கும் அவர் கூற்று சரியென்றே பட்டது.
            நிறைவாக தொகுப்பாளர், மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு பணிபுரிய வந்து தமிழைக் கற்றுக்கொள்வது போல் நாமும்(தமிழர்கள்) மற்ற மாநிலங்களுக்கு சென்று அம்மாநில மொழியை கற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது என்றார்.
          இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள் கூட பேசாத (In the 2001 census of India, 14,135 people reported Sanskrit as their native language-WIKI) சமஸ்கிருதத்திற்கு வாரம் கொண்டாடும் ஆட்சியாளர்கள் மற்ற மொழிகளுக்கு மதிப்பளிக்க தவறுவதன் மூலம் ஒன்று பட்ட இந்தியாவை உடைபட்ட இந்தியாவாக மாற்றாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
பின்னூட்டம் மூலம் உங்கள் கருத்துகளுக்கு சாகாவரம் அளியுங்கள்.

Saturday, 28 June 2014

"டொக்’ என்று அடித்தது

"டொக்’ என்று அடித்தது. அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது.
"டொக்’" என்று மட்டும் அடித்திருந்தால் அது "ஹிந்தி படித்தே தீர வேண்டுமா? "என்ற பதிவாகியிருக்கும்.
ஆனால் அவர் "டொக்" என்று ஒருமுறை இடித்ததோடு இன்னொரு முறையும் "டொக்" என்று இடித்து விட்டார். அதாவது "டொக் டொக்" என்று.
 "அவர்" ,"விட்டார்" போன்ற மரியாதை எல்லாம் காரை வைத்து இடித்ததனால்.
ஒரு மாட்டு வண்டியாலேயோ அல்லது மிதி வண்டியாலேயோ இடித்திருந்தால் "அவன்" ,"விட்டான்" என்றே குறிப்பிடப்பட்டிருப்பார்.
"அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது " என அந்த பதிவர் எழுதியிருக்கிறாரே, என்று நினைத்தால் உங்கள் மூளை செயல்படுகிறது என்று அர்த்தம். அவர்(பதிவர்) அப்படி  "அவன்" என்று அவரை (கார் காரரை) எழுதியது பம்பர் வளைந்து விட்டதே என்ற கோபத்தினால்.
         ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.ஏனென்றால் என் வாகனத்தின் பம்பர் வளையவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் இடித்தது "டொக் டொக்"என்பதனால்.
காரில் இருந்து இறங்கி வந்தவரிடம் "தப்பு என்மேலதான் மன்னிச்சுக்கிடுங்க" என்றேன்.
அவரும் "தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்பு தான். அதனால மன்னிச்சுட்டேன்" என்றவாறே என் கையை பிடித்து குலுக்கினார்.
கை குலுக்கிய அந்த கணத்திலிருந்து நாங்களிருவரும் ("ரூம்மேட்" ,"கிளாஸ்மேட்" Glassmate அல்ல Classmate " ,பெஞ்ச்மேட்" மாதிரி) "டிராவல்மேட்" ஆகி விட்டோம்.
இந்த பதிவ படிச்ச நீங்களும் "டொக் டொக்"  ன்னு இடிச்சு "டிராவல்மேட் ஆகலாம்" ங்கறத எல்லாருகிட்டேயும்
"சொல்லுங்கண்ணே சொல்லுங்க"
குறிப்பு: பின்வரும் செந்நிற எழுத்துகளை வாசிக்கும் போது உங்களுக்குள் அந்த குரல் ஒலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
இது போன்று (எப்போதாவது) எழுதும் பதிவுகளை இலவசமாக பெற வலப்புறத்தில் இருக்கும் "Join this site" என்பதை கிளிக் செய்யவும். அல்லது http://www.sekkaali.blogspot.com/ என்ற முகவரிக்கு வந்து படித்துக்கொள்ளவும்.

Tuesday, 17 June 2014

எப்படி சொல்லி புரிய வைப்பது 
ஒற்றை அறை
குடிசையில்
ஓரமாய் உட்கார்ந்து
அழுபவளிடம்
எப்படி சொல்லி
புரிய வைப்பது
நீ பெரியமனுசி
ஆனது தான்
அப்பன் ஆத்தாளின்
சண்டைக்கு காரணம்
என்றுTuesday, 6 May 2014

தேவதை சொன்ன கதை

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதை பார்க்க முடியுமா?