twitter

Wednesday 19 January 2011

சண்டையா? சேக்காயா?

                    தமிழர்களுக்கு இந்தி பேச தெரியாது.தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற வார்த்தை என்னை அவர்கள் பக்கம் இழுத்தது.தமிழர்கள் ஏன் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான அவசியம் என்ன ?என்று நான் கேட்டதற்கு, இந்தி இந்தியாவின் தேசிய மொழி அதனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதில் வந்தது.
                இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்றேன் நான்.அப்படியென்றால் இந்தியாவின் தேசியமொழி என்ன? என்றார்கள் அவர்கள். இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது என்றேன் நான்.தேசியக் கொடி, தேசிய கீதம்,தேசிய பறவை,தேசிய விலங்கு,தேசிய மலர்,தேசிய விளையாட்டு,தேசிய பாதுகாப்பு சட்டம் என்றெல்லாம் இருக்கும் போது தேசிய மொழி எப்படி இல்லாமல் இருக்கும்.உனக்கு தெரியவில்லை அதனால் தான் இப்படி சொல்கிறாய் என்றார்கள் அவர்கள்.எனக்கு தெரிந்ததனால் தான் சொல்கிறேன்.இந்தி இந்தியாவின் அலுவலக[official language] மொழிகளில் ஒன்று.ஆங்கிலம்,இந்தி மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி ஆகிய மூன்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக செயல் படுகிறது என்றேன் நான்.இந்தியை தேசிய மொழியாக ஏன் வைக்கக்கூடாது? என்று கேள்வியெழுப்பினார்கள் அவர்கள். பல மன்னர்களின் ஆட்சியில் இருந்த நாடுகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.அந்நாடுகளில் வெவ்வேறு இன மக்கள் வாழ்ந்தார்கள்.அவர்களின் மொழிகள்,கலாச்சாரம் வெவ்வேறானவை.சுதந்திரத்திற்கு பின் அவற்றை ஒருக்கிணைக்கும் போது ஒரு மொழிக்கு தேசிய மொழி என்ற அங்கீகாரம் கொடுத்தால் மற்ற மொழிகள் அழிந்து விடும் அபாயம் ஏற்படும்.எந்த ஒரு மொழியும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இந்தியாவிற்கு தேசிய மொழியே வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் என்று பதிலளித்தேன் நான்.இல்லை இல்லை நீ சொல்வது தவறு.இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்பதற்கு ஆதாரம் கொடு என்றார்கள் அவர்கள்.இல்லாத ஒன்றுக்கு எப்படி ஆதாரம் காட்ட முடியும் என்பதனால் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்பதற்கு நீங்கள் ஆதாரம் கொடுங்கள் என்றேன் நான்.வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப்பாருங்களேன் என்றேன்.தேடிப்பார்த்தார்களா? இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் அன்றிலிருந்து என்னை பகையாளியாய் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களை விடுங்கள்.அவர்கள் வேற்று மாநிலத்துக்காரர்கள். வேற்று மொழி பேசுபவர்கள்.தமிழர்களாகிய நீங்கள் சொல்லுங்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழியா? இல்லையா? என்று.Whether Hindi is India's National Language? or Not?.என்று.அவர்கள் சொல்வதில் உடன்பாடா? அல்லது நான் சொல்வதில் உடன்பாடா?என்று. என்னோடு சண்டையா?சேக்காயா?என்று.நான் பகையாளியா? சேக்காளியா? என்று
தொடர்புடைய பதிவுகள்
1.http://nagainthu.blogspot.com/2012/07/blog-post.html
2.http://thamizvinai.blogspot.in/2012/09/blog-post_23.html

18 comments:

  1. வணக்கம் தோழர்,
    மிகச்சரியான வாதம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை,தங்களுக்கு ஆதாரம் வேண்டிமேன்றால் கடந்த ஆண்டு குசராத் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைச் சொல்லுங்கள்,
    வழக்கு இதுதான்: ஒருவர் (பெயர் தெரியவில்லை) குசராத் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார் அனைத்து பொருட்களிலும் அதன் விவரங்கள் இந்தியிலும் குறிப்பிடப்பட வேண்டும் ஏனென்றால் இந்தி தேசிய மொழி என்று.
    நீதிபதிகள் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள் நீதிபதிகள் கூறிய காரணம் இதுதான் இந்தி ஒரு தேசிய மொழி இல்லை அப்படி எங்கேயும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை எந்த மொழியில் பொருட்களின் விவரங்கள் இருக்கவேண்டும் எனபது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது யாரும் கட்டயப்படுத்த் இயலாது என்று கூறிவிட்டார்கள்.

    அந்த மரமண்டைகளுக்கு விளங்குமாறு தெரியபடுத்தவும்.

    நான் கடந்த நான்காண்டுகளாக மும்பையில் இருக்கிறேன் எனக்கும் இந்த அனுபவம் ஏற்ப்பட்டுள்ளது அப்போது தாங்கள் கேட்ட கேள்விகளைப் போலதான் கேட்பேன்.
    இந்தி தேசிய மொழி என்று இவர்கள் பாடத்திலேயே சொல்லிக்கொடுக்கிறார்கள்.

    சமசுகிருத்தைக் கொண்டு மற்ற மொழிகளை அழிக்கப் பார்த்தார்கள் முடிவில் சமசுகிருதமே அழிந்து விட்டது இப்போது அந்தப் பணியை இந்தியை வைத்து செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. நான் எனக்கு இந்தி தெரியாது என்பதை பெருமையாகவே கூறுவேன்.
    இந்திக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ஏன் கூறும் இவர்கள் எத்தனை மொழிக்கு மதிப்பு கொடுகிறார்கள்.
    உலகத்திலேயே அதிகம் பேசப்படும் மொழி சீனம் அந்த மொழியை உலக மொழியாக அறிவித்து கட்டாயம் கற்க வேண்டும் என்று கூறினால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
    ஏன் இந்தி தேசிய மொழி என்று கேட்டால் அது இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்கிறார்கள் அபோதுதேல்லாம் நான் பாரளுமட்ரத்தில் அண்ணா கேட்ட கேள்விகளைத்தான் கேட்பேன்.
    அதிகம் உள்ளது தேசியச் சின்னம் என்றால்
    எந்த அடிப்படையில் புலி தேசிய விலங்காயிற்று?
    எந்த அடிபடையில் மயில் தேசிய பறவயாயிற்று?

    etc..............

    ReplyDelete
  3. வணக்கம் கோகுலகிருட்டிணன்.இது எனது முதல் பதிவு.அதற்கு மிக நீண்ட இரு பின்னூட்டங்களை இட்டு என்னை சந்தோசப்பட வைத்து விட்டீர்கள்.நன்றி.
    இதில் இன்னொரு முக்கியமான விசயம் அந்த சம்பவம் நடந்த பின்பு நான் எனக்கு தெரிந்த தமிழர்களிடம் இது பற்றி விசாரித்தால் யாருக்கும் அதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.இன்றும் கூட.எனவே தான் இந்த இடுகை.

    ReplyDelete
  4. காரணம் ஒண்டுமில்லை தோழர்,
    இந்தி தெரிந்தால் தான் இந்தியாவில் உயிர் வாழவே முடியும் எனபது போல் ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள், அதை தமிழனின் அடிமை மனத்திலும் ஏற்றிவிட்டார்கள், இப்போதும் நடுத்தர குடும்பத்தில் குறிப்பாக சென்னையில் தமிழை மொழிப்பாடமாக எடுப்பதற்கு பதில் இந்தி அல்லது சமசுகிருதத்தை தான் மொழிப்பாடமாக எடுப்பார்கள், அதில் பெருமையும் படுவார்கள்.

    தமிழ் தெரியாததை ஒரு பெருமையாகவும் இந்தி அல்லது சமசுகிருதம் பயில்வதை மிகப் பெருமையாகவும் கருதும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள்.

    இந்தி அறிந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதும் இவர்கள், இந்தி தெரிந்த பீகாரி, வங்காளி எல்லாம் தங்களது பணிக்காக தமிழகத்தை நோக்கி ஏன் வருகிறார்கள் என்று சிந்திப்பதில்லை. எல்லாம் பார்ப்பன ஊடகங்கள் ஏற்ப்படுத்தும் அடிமை மனோபாவம்.

    ReplyDelete
  5. வணக்கம் கோகுலகிருட்டிணன்.இந்தி தெரிந்த பீகாரி சரி.ஆனால் வங்கத்தை சேர்ந்தவர்கள் அம்மாநிலத்தில் இருக்கும் போது இந்தி கற்கிறார்களா என்ன?.ஏனெனில் அம்மொழியும் நம்மொழியை போல் வளம் மிக்கது என படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. இந்தியை தேசியமொழியாக்க எடுக்கப்பட்ட முயற்சி தமிழகம் உட்பட மற்றைய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால அது அன்றே கைவிடப்பட்டுவிட்டது என்பது உண்மை

    ///இந்தி இந்தியாவின் அலுவலக[official language] மொழிகளில் ஒன்று.ஆங்கிலம்,இந்தி மற்றும் அந்தந்த மாநிலத்தின் மொழி ஆகிய மூன்றும் இந்தியாவின் அலுவலக மொழியாக செயல் படுகிறது என்றேன் நான்./// ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் அலுவலக மொழியா இருக்கிறதா? பாடசாலைகளில் 12ம் வகுப்புக்கு மேலே தன் தாய் மொழி தமிழில் உயர்கல்வியை தொடர முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது?? இது நான் இணையத்திலே தெரிந்துகொண்ட செய்தி.

    ReplyDelete
  7. பதிவுலகிற்கு தங்கள் வருகை இனிதாகுக...

    தொடர்ந்து பல நல்ல படைப்புகளை வழங்கி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

    ReplyDelete
  8. ஹிந்தி தேசிய மொழி அல்ல. அனால் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்வது தவறில்லை. கற்றுக் கொள்வதால் தீமை எதுவும் இல்லை. கற்றுக் கொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்

    ReplyDelete
  9. எல் கே, "ஹிந்தி தேசிய மொழி அல்ல. அனால் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்வது தவறில்லை. கற்றுக் கொள்வதால் தீமை எதுவும் இல்லை. கற்றுக் கொள்ளாவிடில் நஷ்டம் நமக்குதான்" என்ற உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடே.ஆனால் இல்லாத ஒன்றை[இந்தி இந்தியாவின் தேசிய மொழி] இருப்பதாக சத்தமாக சொல்பவர்களுடன் அது பற்றியே தெரியாதவர்களும் "ஆமாம்" என்று சொல்லும் போது? அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமல்லவா?.தங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் இது பற்றி கொஞ்சம் விவாதியுங்களேன் நண்பரே.

    ReplyDelete
  10. http://www.thehindu.com/news/national/article94695.ece

    அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்த செய்தி இதோ இங்கே.

    ReplyDelete
  11. அன்புள்ள சேக்காளி,
    ஹிந்தியை மட்டும் பேசக்கூடிய பல வட நாட்டவர்களின் பொதுமை புத்தியின் வெளிபாடு தான் இந்தத "ஹிந்தி தேசிய மொழி" என்கிற வதந்தி. எனக்கு நான்கு இந்திய மொழிகள் தெரியும். தமிழுக்கு அடுத்தபடியாக சரளமாக ஹிந்தியில் பேசுவேன். ஆனால் அதை ஆட்சி மொழியாக நிச்சயம் ஏற்க முடியாது.
    என் அனுபவத்தில், எனக்கு ஒரு உத்திரப்ப்ரதேசத்தைச் சேர்ந்த ஒருவன் (ஆஃப்ஷோரில்) இருக்கிறான் , சென்னையில் வேலை ஆனால் மாற்றலாகி ஹைதராபாத் சென்று அதே ப்ரொஜக்டில் இருக்கிறான். இந்த இரண்டு ஊர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்டதற்கு அவன் சொன்ன காரணம் மொழி. இவர்களைப் போன்ற சோம்பேறிகளுக்காக எந்த மொழியும் சிதைக்க படக்கூடாது.

    ஹிந்தி தெரியும் என்பதில் பெருமை இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் அது ஒரு வசதி தான். தமிழ் தெரிந்தால் தான் வேலையே கிடைக்கும் என்று நினைக்கும் எத்தனையோ வெளி மாநில (பீஹார், ஒரிஸ்ஸா) கட்டிட வேலை செய்யும் ஊழியர்கள் தமிழில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த அவசியம் நம்மில் சிலருக்கு இல்லாமல் போவதால் தமிழை படிக்காமல் அதையும் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள் அது வேதனைக்குறியது.

    ReplyDelete
  12. குஜராத் தொடங்கி மேலே உள்ள பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வரும் இளைஞர்கள் அவர்வர் மாநில மொழிகளை பேசுகிறார்கள். ஹிந்தியை மதிப்பது இல்லை. மொத்த ஜனத்தொகையில் 20 சதவிகிதம் ஹிந்தியை பேசுபவர்கள் இருக்கக்கூடும்.

    ReplyDelete
  13. என்று அனைத்து மாநில மக்களும் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்கிறார்களோ அன்று அது நடைமுறைப் படுத்தப் படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் ஒன்று.. ஆகையால் இந்தி முழுவதும் திணிக்கப் படுகிறது.. இந்தியை கற்றுக் கொள்ளாமல் விடுவதால் நமக்கு தான் நஷ்டம் என்று எல் கே கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அரசு தன குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காமல் அவர்கள் உழைப்பை தனியார் நிறுவனங்கள் சுரண்டி கொழுக்கவே இந்த ஏற்பாடு ஆகும்... தனியார் நிறுவனங்களில் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றிக் கொள்ளலாம்.. ஆனால் தமிழ் மொழி தமிழன் மனது வைக்காமல் அழிந்து விடும் என்று கூறுவது சிறுபிள்ளை வாதமாகும்.. ஒவ்வொரு தமிழனும் ஆங்கிலம் கலக்காமல் எப்படியாவது பதிவிட வேண்டும் என்று சிரமப்படுவது நன்றாக தெரியும் பொழுது தமிழ் இன்று மட்டும் அல்ல என்றும் அழியாது.

    ReplyDelete
  14. தொடர்புடைய பதிவு
    http://nagainthu.blogspot.com/2012/07/blog-post.html

    ReplyDelete
  15. நல்ல பதிவு நானும் கிட்டத்தட்ட இதையேதான் எழுதியிருக்கிறேன்

    ReplyDelete
  16. நான் தான் இதற்கு பதில் கொடுத்துள்ளேனே.

    நான் அறிமுகப்படுத்தும் போது என்னை தமிழ்நாட்டுக்காரன் என்றுதான் அறிமுகம் செய்து கொள்வதுண்டு. ஹிந்தி என்பது தொழில் ரீதியாக தேவைப்படுவர்களுக்கு மட்டும் போதுமானது. இங்கே வந்து வேலை பார்ப்பவர்கள் எவரும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பு கூட வருவதில்லை.

    ReplyDelete
  17. நீங்க சொன்னது ரொம்பச்சரி. இந்தியாவில் தேசியமொழி என்று இதுவரை ஒன்றும் இல்லை. ஆனால் எப்படியோ ஹிந்தி மொழிக்கு அந்த இடத்தைப் பிடிச்சு வச்சுருக்கு.

    அதிகமான மக்கள் ஹிந்தி பேசறாங்கன்னும் அதைவச்சுத்தான் தேசியமொழின்னு ஹிந்திக்கு இடம் கிடைச்சிருக்குன்னும் பலபேர் பலவிதமாச் சொல்றாங்க.

    எனக்கு ஹிந்தி நல்லாவே தெரியும். சரளமாப் பேசுவேன். படிக்கவும் முடியும்.எழுதுவதுதான் கொஞ்சூண்டு கஷ்டம்.

    நாடு முழுசும் ஹிந்தி பரவலாப்பேசப்படுது என்பதால் பயணங்களில் லகுவாக இருக்கு.

    ஹிந்தி முக்கியமுன்னு சொல்லிக்கிட்டு ஆங்கிலத்தை மட்டும் விட்டு விடக்கூடாது.

    பொதுவாக சிலபல மொழிகளைத் தெரிஞ்சு வச்சுருந்தால் நல்லதே.

    உலகம் போறபோக்கில் பேசாம சீனமொழி கற்றுக்கொண்டால் இன்னும் பயன் கூடுதல் என்பதே உண்மை!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி துளசி கோபால்

      Delete