twitter

Friday 5 June 2015

நொந்த நூடுல்ஸ்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் 
மெய்வருத்தக் கூலி தரும்
என்றார் திருவள்ளுவர்.அதே போல் ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் போது நாளடைவில் அது உண்மையாகி விடும். அதை நிரூபிப்பது போல் நடந்துள்ள ஒரு சம்பவம் தான் இது.
 முன்பெல்லாம் பிரச்னைகளில் சிக்கி தவிப்பவர்கள்
                                 "நொந்து நூலாகி போனேன்" 

என்று புலம்புவார்கள். பின்பு புதுமையாய் சிந்தித்தவர்கள் அதே வார்த்தையை தரம் உயர்த்துவதாய் நினைத்து
 "நொந்து நூடுல்ஸ் ஆனேன்"
என்று கூறத் துவங்கினார்கள். தற்போது அந்த வார்த்தை எந்தளவிற்கு உண்மையாகி இருக்கிறது  என்பதற்கு சிறந்த உதாரணம் அதனை (நூடுல்ஸ்) தயாரித்த நிறுவனம் படும் பாடு.
அதற்கான காரணம் நமது உலகம் சுற்றும் பிரதமர் சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு அங்கே மூன்று வேளையும் உணவாக நூடுல்ஸையே விருந்தளித்தார்களாம். அதில் கடுப்பானவர்கள் எடுத்த நடவடிக்கை தான் தற்போதைய நூடுல்ஸ் படும் பாடு என ஒருவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.அந்த காரணம் உண்மையாயில்லாமல் இருக்கலாம். ஆனால் வெந்து நூடுல்ஸ் ஆக வேண்டிய ஒன்றை "நொந்து நூடுல்ஸ்" ஆகி என்று சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி சொல்லியே நொந்து போக வைத்த பெருமை அதனை சொன்ன அனைவரையும் சார்ந்தது.

வேண்டுகோள் : 
இதனை படித்து நொந்து நூலாகி போனவர்கள் என்ன சாபம் வேண்டுமானாலும் இடுங்கள் "நொந்து நூடுல்ஸ்" ஆவாய் என்பதனை தவிர்த்து.

2 comments:

  1. இதெல்லாம் ஒரு பதிவா? எத்தனையோ எழுதறதுக்கு இருக்கு. இதை போய் ஒரு பதிவுன்னு எழுதி நீயும் ஒரு பதிவர் பெத்த பேரு வச்சிருக்கே====ஆப்ப மண்டயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி.ஆப்ப மண்டையா ங்கறதுக்கு பதிலா நூடுல்ஸ் மண்டையா ன்னுருக்கலாம்.

      Delete