twitter

Monday 15 August 2016

ஆக்ஸிஜன் கிலோ இருபது ரூபாய்


ஆகஸ்டு 15 ல் கொண்டாடப் படும் சுதந்திர தினத்தினை பெற நடத்தப்பட்ட முக்கிய போராட்டங்களில் ஒன்று உப்பு சத்தியாகிரகம்.உப்பு உற்பத்திக்கு ஆங்கிலேய அரசால் விதிக்கப் பட்ட வரிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் அது.அப்போது இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பத்து பேர் உப்பு காய்ச்சினால் (உற்பத்தி செய்தால்) போதும்.ஆங்கிலேய அரசு பணிந்து விடும் என்றாராம் காந்தி.
சரி அதுக்கென்ன இப்ப?
அதே "கிராமத்துக்கு பத்து பேர்" சூத்திரத்தை வேறு மாதிரியாக மாற்றியமைத்து மறுபடியும் உள்ளே வந்திருக்கிறான் வெள்ளைக்காரன்.
கிராமத்திற்கு பத்து பேரிடம் பெப்ஸி விற்றால் போதும்,கிராமத்திற்கு பத்து பேரிடம் கேஎப்சி விற்றால் போதும், போன்ற நிறைய "போதும்"களோடு.இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்று விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு வந்திருக்கிறான்.இழந்தவனுக்கு தானே அதன் அருமை தெரியும்.போனால் திரும்ப கிடைக்காது என்பதற்கு அதென்ன பொழுதா? இல்லை உயிரா?.சுதந்திரம் தானே மறுபடியும் கிடைத்து விடும் அந்தவெள்ளைக்காரனுக்கு.நாமெப்போது அனுபவித்திருக்கிறோம் அதனை பற்றி சிலாகிப்பதற்கு.
யார் ஆண்டால் என்ன என்று வாழும் நமக்கு 1947 ஆகஸ்டு 15 ல் நடைபெற்றது அதிகார மாற்றம் தானே. ஐந்து வருடத்திற்கொரு முறை அதிகாரத்தினை மாற்றிக் கொடுப்போம்.1000லிட்டர் தாமிரபரணி தண்ணீருக்கு 40ரூபாய் தான் விலை என நிர்ணயித்த வெளைக்கார பெப்சிகாரன் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுக்கும் ஒரு நாள் விலை வைப்பான்.அப்போது இரண்டு கிலோ சுத்தமான ஆக்ஸிஜனை இருபது ரூபாய் மானிய விலையில் வழங்கும் கட்சிக்கு ஐந்து வருடத்திற்கான ஆட்சியதிகாரத்தை மாற்றிக் கொடுப்போம்.
நல்ல வேளை "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனக் கேட்ட பாரதி இப்போது இல்லை.இருந்திருந்தால் அவனும் இரண்டு லிட்டர் கோலா பாட்டிலில் தனது தாகத்தை தணித்திருப்பான்.
விகடனில் வெளியான

இனி காற்றும் காசுதான்!

ஆக்ஸிஜன் விற்பனைக்கு

2 comments:

  1. ஜோக்காளி நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் !சேக்காளி நீங்க ,இரண்டு கிலோ சுத்தமான ஆக்ஸிஜனை இருபது ரூபாய் என்று சொல்லும்போது நானும் நம்பத்தான் வேண்டியுள்ளது !

    ReplyDelete