twitter

Thursday, 11 December 2014

டச் ஸ்கின்

டச் ஸ்கிரீன் கேள்விப் பட்டிருப்பீர்கள்

அதென்ன டச் ஸ்கின்?.

"டச் ஸ்கின்" என்பது  "டச் ஸ்கிரீன்" என்பதை எழுதும் போது ஏற்பட்ட எழுத்துப்பிழை என நினைக்காதீர்கள்.

புதிதாய் வந்துள்ள தொழில்நுட்பம்.
மொழிபெயர்ப்பு மட்டும் எனது மதி நுட்பம்.

டச் ஸ்க்ரீன் என்னும் தொடு திரை போன்,டேப்களைப் போல் டச் ஸ்கின் என்னும் தொடு தோல் போன்கள் வந்துள்ளன.

அப்டின்னா?


              கை சங்கிலி போன்ற ஒன்றை கையில் அணிந்து கொண்டு (கை சங்கிலின்னா கையில அணிவது தானேன்னு கேக்கப்பிடாது) கையை ஒரு திருப்பு திருப்பினால் அதிலிருந்து ஒளி நம் கையில் விரிகிறது. காண்பதற்கு சினிமா புரொஜெக்டரிலிருந்து வெளிவரும் ஒளியைப் போல் சிறிய அளவில் காணப்படுகிறது. திரையாக நம் கை.
               வெளி வரும் ஒளியிலிருந்து பட்டன்களும்,முத்திரைகளும்(LOGOS) நம் கையில் விரிகின்றன. மற்றொரு கையின் விரல் கொண்டு பட்டன்களை தொட்டால் டச் ஸ்கிரீன் மொபைல் போன்களைப் போல்  தன் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறது.
"ராத்திரி சரக்கடிச்சுட்டு தமிழ் பேசும் ஆங்கில படம் பா(ர்)த்து விட்டு அப்புறமா வந்த கனவை கண்டு இப்படி எழுதியிருக்கிறேன்"
 என நீங்கள் நினைத்தால் நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
"அப்போ சரியா எப்படி நினைக்க வேண்டும்" என்றால் எழுதியுள்ள அத்தனையும் Youtube ல் கண்டது.
எப்படி என்பது

ரு
சி
றி
ய 
இடைவேளைக்கு பின்பு

மூல ஆதாரம் :http://www.cicret.com/wordpress/?page_id=17920



Youtube (தமிழ் மொழி பெயர்ப்பு தப்பான அர்த்தம் தருகிறது)ஆதாரம்:

துப்பு :Sureshpanel Sp
https://www.facebook.com/groups/304559716412549

Thursday, 31 July 2014

என்னங்க! ஏதாவது சொல்லிட்டு போங்க

30 - ஜுலை - 14 அன்று சென்னை ஹலோ எப்எம் http://hello.fm/liveStream1.aspx கேட்டுக் கொண்டிருந்தேன்.அதில் மத்திய அரசு பணிகளுக்காக யுபிஎஸ்சி(UPSC) ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam) கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதை பற்றி நேயர்களிடம் கருத்து கேட்டு நேரடி ஒலிபரப்பு செய்தார்கள்.
          அதில் ஒருவர், மத்திய அரசு பணியானது தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் ஆற்றவேண்டிய ஒன்று.எனவே பிற மாநிலங்களில் சென்று பணியாற்ற ஆங்கிலம் அத்தியாவசியமானது என்றார்.
          இன்னொரு பெண்மணி,தனது மகள் மத்திய அரசு பணிகளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும்,அவள் மற்றும் அவளைப் போன்று அத்தேர்வு எழுத முனைபவர்கள் ஆங்கில வழி கல்வியே பயின்று வருவதால் ஆங்கிலத்தினாலான தேர்வுகள் சரிதான் என்றார்.
           இதைக் கேட்ட போது எனக்கும் அவர்களிருவரும் சொல்வது சரியென்றே தோன்றியது.ஆனால் இன்னொருவர் சொன்ன கருத்து அந்த எண்ணத்தை மாற்றியது.
          முதலில் அவர் அவரை அறிமுகப்படுத்தும் போது இது போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றில் சில வருடங்கள் பணியாற்றியதாக தெரிவித்துக்கொண்டார்.
           அடுத்து அவர் அது போன்ற தேர்வுகள் பற்றிய விபரங்களைச் சொன்னார்.அத்தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதித்தறிய தனித்தேர்வு இருப்பதாக தெரிவித்தார்.
              மேலும் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் வினாவை தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இந்தி தாய்மொழியாக இல்லாத ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது.எனவே இந்தி தெரிந்தவருக்கு வழங்கப்படும் அந்த வாய்ப்பு இந்தி தெரியாத அனைவருக்கும் மறுக்கப் படுகிறது.எனவே அந்த வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப் பட அவரவர் தாய்மொழியிலும் வினாத்தாள் இருக்க வேண்டியது அவசியமே என்றார்.எனக்கும் அவர் கூற்று சரியென்றே பட்டது.
            நிறைவாக தொகுப்பாளர், மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு பணிபுரிய வந்து தமிழைக் கற்றுக்கொள்வது போல் நாமும்(தமிழர்கள்) மற்ற மாநிலங்களுக்கு சென்று அம்மாநில மொழியை கற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது என்றார்.
          இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள் கூட பேசாத (In the 2001 census of India, 14,135 people reported Sanskrit as their native language-WIKI) சமஸ்கிருதத்திற்கு வாரம் கொண்டாடும் ஆட்சியாளர்கள் மற்ற மொழிகளுக்கு மதிப்பளிக்க தவறுவதன் மூலம் ஒன்று பட்ட இந்தியாவை உடைபட்ட இந்தியாவாக மாற்றாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.
பின்னூட்டம் மூலம் உங்கள் கருத்துகளுக்கு சாகாவரம் அளியுங்கள்.

Saturday, 28 June 2014

"டொக்’ என்று அடித்தது

"டொக்’ என்று அடித்தது. அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது.
"டொக்’" என்று மட்டும் அடித்திருந்தால் அது "ஹிந்தி படித்தே தீர வேண்டுமா? "என்ற பதிவாகியிருக்கும்.
ஆனால் அவர் "டொக்" என்று ஒருமுறை இடித்ததோடு இன்னொரு முறையும் "டொக்" என்று இடித்து விட்டார். அதாவது "டொக் டொக்" என்று.
 "அவர்" ,"விட்டார்" போன்ற மரியாதை எல்லாம் காரை வைத்து இடித்ததனால்.
ஒரு மாட்டு வண்டியாலேயோ அல்லது மிதி வண்டியாலேயோ இடித்திருந்தால் "அவன்" ,"விட்டான்" என்றே குறிப்பிடப்பட்டிருப்பார்.
"அவன் வண்டி என்னுடைய பம்பரில் இடித்திருந்தது " என அந்த பதிவர் எழுதியிருக்கிறாரே, என்று நினைத்தால் உங்கள் மூளை செயல்படுகிறது என்று அர்த்தம். அவர்(பதிவர்) அப்படி  "அவன்" என்று அவரை (கார் காரரை) எழுதியது பம்பர் வளைந்து விட்டதே என்ற கோபத்தினால்.
         ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.ஏனென்றால் என் வாகனத்தின் பம்பர் வளையவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் இடித்தது "டொக் டொக்"என்பதனால்.
காரில் இருந்து இறங்கி வந்தவரிடம் "தப்பு என்மேலதான் மன்னிச்சுக்கிடுங்க" என்றேன்.
அவரும் "தமிழ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை மன்னிப்பு தான். அதனால மன்னிச்சுட்டேன்" என்றவாறே என் கையை பிடித்து குலுக்கினார்.
கை குலுக்கிய அந்த கணத்திலிருந்து நாங்களிருவரும் ("ரூம்மேட்" ,"கிளாஸ்மேட்" Glassmate அல்ல Classmate " ,பெஞ்ச்மேட்" மாதிரி) "டிராவல்மேட்" ஆகி விட்டோம்.
இந்த பதிவ படிச்ச நீங்களும் "டொக் டொக்"  ன்னு இடிச்சு "டிராவல்மேட் ஆகலாம்" ங்கறத எல்லாருகிட்டேயும்
"சொல்லுங்கண்ணே சொல்லுங்க"
குறிப்பு: பின்வரும் செந்நிற எழுத்துகளை வாசிக்கும் போது உங்களுக்குள் அந்த குரல் ஒலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
இது போன்று (எப்போதாவது) எழுதும் பதிவுகளை இலவசமாக பெற வலப்புறத்தில் இருக்கும் "Join this site" என்பதை கிளிக் செய்யவும். அல்லது http://www.sekkaali.blogspot.com/ என்ற முகவரிக்கு வந்து படித்துக்கொள்ளவும்.

Tuesday, 17 June 2014

எப்படி சொல்லி புரிய வைப்பது



 
ஒற்றை அறை
குடிசையில்
ஓரமாய் உட்கார்ந்து
அழுபவளிடம்
எப்படி சொல்லி
புரிய வைப்பது
நீ பெரியமனுசி
ஆனது தான்
அப்பன் ஆத்தாளின்
சண்டைக்கு காரணம்
என்று



Tuesday, 6 May 2014

தேவதை சொன்ன கதை

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதை பார்க்க முடியுமா?





Wednesday, 21 August 2013

ஆப்பிளின் குழியும் அவளின் தொப்புளும்


           வாங்க. ஒங்கள வர வைக்கத்தான் ஆப்பிளையும் அவளையும் இழுக்க வேண்டியதா போச்சு..
நம்மாளு ஒருத்தரு ஒரு முக்கியமான பதிவ போட்டுருக்காரு. மாசம் ஒண்ணாக போவுது. ஒரு பின்னூட்டதையும் காணல. நாந்தான் போனா போவுதுன்னு ஆப்பிளையும் - அவளையும் இணைச்சு ஒரு பின்னூட்டம் எழுதினேன்.அதனால தான் என் பதிவுக்கு இந்த தலைப்பு.அப்புறம் இந்த "திரட்டிகள்" லேயும் அந்த பதிவு வந்ததா தெரியல.திரட்டிகள்ல அவரு பதிவ சேத்துருக்காரா இல்ல திரட்டிகளுக்கு அவரு பதிவ வெளியிட விருப்பமில்லையானு தெரியல.பரவாயில்ல நம்ம (நான்) அத திரும்ப வெளியிடுவோம். நம்மையும் முப்பத்தியேழு பேரு (37 ன்னு எழுதுனா சுருக்கமா இருக்குல்ல) பின் தொடருராங்க. அவுங்களும் அத படிக்கட்டும். திரட்டியிலேயும் இணைப்போம். அது மூலமாவும் படிக்கவுங்க படிக்கட்டும்.படிச்சுட்டு அடிக்கட்டும். கஞ்சிக்கும், குஞ்சிக்கும் அடிச்சுக்கும் போது இதுக்கு அடிக்க மாட்டாங்களா என்ன. யார அடிக்கணும் னு கேக்கீங்களா?."அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,ஆட்சியாளர்களை"  னு சொன்னா என்ன சும்மா உட்டுருவாங்களா அவுங்க.அதனால என்(னை)னத்தான் அடிக்க சொன்னேன்.எத்தன தடவ வேணும் னாலும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கலாம். நான்  கேட்டா, "நான் அடிச்சது காலையில","நான் அடிச்சது மத்தியானம்","நான் அடிச்சது சாயங்காலம்","நான் அடிச்சது  ராத்திரி","நான் அடிச்சது நேத்து","நான் அடிச்சது போன வாரம்","நான் அடிச்சது போன மாசம்" அப்படின்னு சொல்லிட்டு என்ன திரும்பவும் அடிக்கலாம்.அவங்கவுங்க சொந்த வேலையினால மறந்து போச்சுன்னா ஒரு வருசம் கழிச்சு வந்தும் அடிக்கலாம்.
அடிக்க ஆரம்பிக்கதுக்கு முன்னால அவரு பதிவையும் அதுக்கு நான் எழுதுன பின்னூட்டத்தையும் படிங்க.அப்பந்தான் இந்த பதிவோட அர்த்தம் வெளங்கும்.இல்லேன்னா இந்த நாடு வெளங்காம போய்ட்டு இருக்கற மாதிரி இந்த பதிவோட தலைப்புக்கும் அர்த்தம் வெளங்காமலேயே போய்ரும்.

அவரோட பதிவுக்கு போக
http://maniblogcom.blogspot.com/2013/07/blog-post_24.html
திருட்டு விசிடி, டிவிடி பாக்கற பழக்கம் உள்ளவங்களுக்கு

 அய்யய்யோ, அய்யய்யோ, கடற்கரை காணமல் போகுதே ?

      கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம். ஆகா. எத்தனை அழகான திட்டம். வெங்காயம். எவன்யா சொன்னான் அழகான திட்டம்னு?  ஆமாம்.மாநிலமெங்கும் "தண்ணீர்" கிடைக்காதபோது, அது அழகான திட்டம்தானே? யோவ். கடல்னா என்னனு தெரியுமா? கடல் நீர்னா  என்னனு புரியுமா? அதுல இருக்கற உப்பு எப்படிப்பட்டதுணி அறியுமா? அதிலிருந்து "உப்பை நீக்கி குடிநீர்" ஆக்கினா,என்னாகும்னு விளங்குமா? இப்போ "சூளேரி காட்டுகுப்பத்துல" ஒரு டிசேலிநேசன் பிளான்ட் இருக்கே? கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நால்லாதானே போய்க்கிட்டு இருக்கு? எவனய்யா சொன்னான்?  முதல்ல மீனவர் சங்கத்துகாரங்க, "இது ஆபத்தான திட்டம்னு" சொல்லியும் அந்த ஊர் சனம் கேக்கல.இப்போ அடிச்சிக்கிறாங்க,வயித்துல?  ஏன்? கடலுக்கு மீன் பிடிக்க போன ஒரு மீனவர் இந்த திட்டத்திற்காக கட்டிய "கடலுக்குள் சுவர்" என்பதில் படகு மோதி இறந்தார்.கடல் நீர் ஊருக்குள் வரத்தொடங்கி, ஊரையே "காலி" செய்யும் நிலைமை வந்துவிட்டது.

                   கடல் நீரை எடுக்கும் "குழாயில்" சிறிய மணல் உள்ளே நுழைந்து, அந்த "ஆலை" பழுதாகி, ஒரு குழாயில் உற்பத்தி பாதிப்பு. அதன்மூலம் கொட்டிவாக்கம் வரை குடிநீர் கொடுத்து வந்த "சென்னை குடிநீர் வாரியம்" ஒரு வாரத்திற்கு மேல் குடிநீர் கொடுக்க முடியவில்லை. அத்தகைய "குடிநீரும்" எப்படி இருக்கும்? மயிலாப்பூர் நொச்சி குப்பத்தில் ஒரு "டிசெலினெசன் பிளான்ட்" "டீம்" என்ற  பெயரில் அரசு நிறுவனம் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதில் முதல் நாள் தண்ணீர் சுவையாக இருக்கும் அய்யா.மூன்றாம் நாள் "புழு நெளியும்" அய்யா. என்கிறார்கள். இதிதான் அனுபவம் என்றால், ஏன் இந்த அதிகாரிகள் இப்படி "தவறான திட்டத்தை" ஆலோசனை கூறி அரசை அசிங்கப் படுத்துகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? துபாயில் இந்த திட்டம் இருக்கிறதே? என்கிறார்கள். அய்யா, அங்கே நிலத்தின் அடியில் நீர் எடுக்க முடியாது. பாலைவனம். நம்ம ஊர்ல "ஒழுங்கா ஏரி, குளம்",என்று மூதாதையர்களால் தோண்டப்பட்டவற்றை  "பராமரித்தாலே" போதுமே?   அதுல போய் "பிளாட் போட்டு விக்கறீங்க". ஏரி,குளம், தூர் வாரி ஆழப்படுத்த "அரசுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பில்லை". கடல்ல போய்  ஒங்க விளையாட்டை காட்டறீங்க. அது திருப்பி அடிக்குது.

             நீங்க எடுக்கற கடல் உப்பின் "கழிவு உப்பை" கடலிலேயே கொட்டறீங்களே? அடர்த்தியான உப்பு காரணமாக அது "மீன் வளத்தை"  அழிக்காதா? என்ன மூளை அய்யா உங்களுக்கு? கடலை பற்றி ஒன்னும் விளங்கலைனா, மீனவர்களை  கூப்பிட்டு கேளுங்கய்யா?  உங்க "நிலம் சார்ந்த உலக சிந்தனையை" கடல் வாழ் பழங்குடிகளான மீனவர்கள் மீது ஏன் "திணிக்கிறீங்க?" கடற்கரை முழுக்க இப்போ "சூளேரி காட்டு  குப்பத்தில்" அரிக்கப்பட்டு விட்டதே? அதை ஈடுகட்ட "பாரங்கல்களை" போடும் அதிகாரிகளே, உங்கள் மூளையில் இருப்பது "பாரங்கல்களா?" துபாயில் மட்டும் எப்படி இந்த திட்டம் வெற்றி அடிக்கிறது? என்று கேட்கிறீர்களே? அங்க "கரையோர மீன்பிடி தொழில்"நம்ம ஊரைப் போல கிடையாது. அங்க "ஆழ்கடல் மீன்பிடி" மட்டும்தான். அதனால் நீங்க கரையோரம் "பாரங்கல்லை" போட்டாலும், போடாவிட்டாலும், அது மீன் பிடி தொழிலை ஒன்றும் செய்யாது. இந்த லட்சணத்தில், தமிழக அரசு, தமிழக கடற்கரையோரம் "நூறு டிசேலிநேசன் பிளான்ட்" கொண்டுவர திட்டமிடுகிறதாம்.அது எப்படி இருக்கு?

               துபாயில் ஒவ்வொரு கடலோர ஊருக்கும் இடையில் நூற்றுக் கணக்கான மைல் தூரம் இருக்கு. தமிழக கடற்கரை மொத்தம் இருக்கற "ஆயிரம் கிலோமீட்டரில்" பத்து கிலோ மீட்டருக்கு ஒரு மீனவர் கிராமம் இருக்கு. அந்த கடலோர கிராமங்கள் என்னாகும்? இதற்க்கு பெயர் "மீனவர் நண்பர் ஆட்சியா?" மீனவர் விரோத ஆட்சியா? நிலம்சார்ந்த உலகின் அரசியல்வாதிகளே,அதிகாரிகளே, ஆட்சியாளர்களே, நீங்கள் இனி "கடல்சார்ந்த உலகின் " மீனவ மக்களையோ, அவர்களின் கடற்கரையையோ, கடலையோ" தொட்டு அழிக்க முற்பட்டால், இங்கொரு "சோமாலியா" உருவாவதை தடுக்க முடியாது? சோமாலியாவின் கடல்சார் மீனவ மக்களை ஏகாதிபத்தியம் அழித்ததால் தான் அவர்கள் இன்று," கடல் கொள்ளைக்காரர்களாக" உருவாகி உங்களது உலகத்திற்கே சிம்ம சொப்பனமாக மாறி இருக்கிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள். இங்கும் அப்படி ஒரு நிலையை அரசு தோற்றுவிக்கத்தான், "சூளேரி காட்டு குப்பங்கள்" உருவாக்க விரும்புகிறதா?
1 comment:
சேக்காளி said...
    ஒரே நாள்லேயா ஒலகம் அழிஞ்சுர போவுது. கொஞ்சம் கொஞ்சமா தானே அழியும்.அதுக்கு போயிட்டு இப்படி கூப்பாடு போடுதியளே.இந்த பதிவ எத்தன பேரு படிச்சாங்கன்னு தெரியல.பின்னூட்டதுல ஒன்னையும் காணலேங்க போது மக்களுக்கு அக்கறை எம்புட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுது. ஆப்பிளின் காம்பு இருக்கும் குழி போல் அந்த(ஏதாவது ஒரு நடிகை) நடிகையின் தொப்புள் இருக்கிறது என்று ஒரு படத்தின் நாயகியை வர்ணித்து திரை விமர்சனம் எழுதுவியளா. அத உட்டுட்டு.
August 21, 2013 at 12:46 AM