twitter

Wednesday, 10 August 2011

திரையில் வருமுன் "மங்காத்தா" வலையில் - MANKATHA

              உச்ச நட்சத்திரத்தின் வாரிசு மகளுக்கு திரைப்படம் தயாரிக்கும் ஆசை வந்தது.அதனை இயக்க அவள் தேர்ந்தெடுத்த இயக்குநர் முதல் பாடலுக்கே தேசிய விருது பெற்ற பாடலாசிரியரின் மகன்.அந்த இயக்குநர் தனது படத்திற்கு இசையமைப்பாளராய் தேர்ந்தெடுத்தது இசையின் இளைய மைந்தனை.இத்தனை உச்ச வாரிசுகளுக்கும் நடுவில் கதாநாயகன் எந்த வித பின்புலமும் இல்லாமல் திரையில் அறிமுகமாகி இந்த படத்தில் தனது அரை சதத்தினை கடக்க இருக்கும் ஆசை நாயகன்.இந்த கலவையில் படத்தின் மதிப்பு எகிறவே அப்போது ஆண்டவனின் வாரிசு பார்வையை மாற்றியது இந்த திரைப்படத்தின் மேல்.
               உள்ளே வெளியே நடைபெற்ற மங்காத்தாவில் உச்ச நட்சத்திர வாரிசு மகளின் பெயர் சத்தமின்றி தயாரிப்பாளர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டது.ஆண்டவனின் வாரிசு என்பதால் மட்டுமே அது தயாரிப்பாளர் பெயராய் சேர்க்கப் பட்டது.
இங்கே "இது அம்பானி பரம்பரை" என்ற இந்த பாடல் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்பட்ட வர்க்கத்திற்கும் நடைபெற்ற மங்காத்தாவில் ஆண்ட வர்க்கம் அதிரடியாய் ஆட ஆளப்பட்ட வர்க்கம் அமைதியாய் ஆடி அரியணையை, "இலவசமாய் அரிசி தருகிறேன் என்ற அரசி" யிடம் ஒப்படைத்தது.
நாளை, இன்று இப்போது என பாடல்கள் வெளியிடப்படும் நாளை ஒருவாறாக முடிவு செய்து அறிவித்த பின் "நான் கொண்ட கொள்கையிலிருந்து எப்போதும் மாறுவதில்லை.எனவே பாடல் வெளியீட்டு விழாவிற்கெல்லாம் வர மாட்டேன்" என்று தலை ஆடியது மங்காத்தா.

இது ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க இசையின் வாரிசு அமைதியாய்
                    1.ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு மக்கள் நாடித்துடிப்பை கண்டது.
                     2. அடுத்து பாடல் விபரங்கள் அடங்கிய குறுந்தகட்டின் உறையை மட்டும் வெளியிட்டு மக்களிடையே பாடல் கேட்கத் தூண்டும் ஆவலை உயரச்செய்தது.
                   தலை ஆடிய மங்காத்தாவினால் அமைதியான முறையில் பாடல் நேரிலும்,தபால் மூலமாகவும் வெளியானாலும் அதிவிரைவாய் மக்களிடையே பரவும் வதந்திகளை விட வேகமாய் இணையத்தில் வெளியாகி விட்டது.
              இந்நிலையில் படம் வெளியாகப் போகும் நாள் அறிவிக்கப்பட்டது.ஆனாலும் அந்நாளில் படம் வெளியாகுமா? என்ற ஆவல் படக்குழுவினரோடு,திரையுலகத்தினரோடு, ரசிகர்களுக்கும் தான்.
                                                                        காரணம்
"இலவச அரிசி தந்த அரசி"யின் ஆட்சியில் "ஆண்டவன் வாரிசு" தயாரித்த படம் வெளி வருமா?
அதுவரை விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா

4 comments:

  1. விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா.

    word verification எடுங்க

    ReplyDelete
  2. word verification இருக்குது. செட்டிங்ஸ் போய் பாருங்க

    ReplyDelete
  3. அன்பின் நண்பருக்கு வணக்கம்,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete
  4. word verification எடுத்ததுக்கு நன்றி.

    //தொடர்ந்து குறைகளை நிறைவாக்க அறிவுரை வழங்கவும்.// அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லை

    ReplyDelete