twitter

Thursday, 26 April 2012

உன் சமையல் அறையில் - un samayal arayil

     
     தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும் எத்தனையோ இரவுகள் என்னை தூங்க வைத்துக் கொண்டிருப்பது திரு.இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்கள்தான். "திரு.இளையராஜா அவர்கள்" அன்னியமாய் படுவதால் இனி "இளையராஜா" என்றே தொடரலாம் என்று நினைக்கிறேன்.
பாடல் பதிவகங்களுக்கு சென்று பாடல்களை நாட்கணக்கில் தேடி ஒலி நாடாக்களில் பதிந்து கேட்டு ரசித்த ரசனை இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இந்த கணிணி யுகத்திலும் அப்படியே தொடர்கிறது எனக்கு.இன்னும் திரைக்கு வராத "படித்துறை" படத்தின் டிரைலரில் ஒலித்த ஒரு சில வரிகளை MP3 பாடல்களாக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் இளையராஜா மீது எனக்குள்ள கோட்டி எப்படி பட்டதென தெரிந்து கொள்ளலாம்.
     இப்படி பட்ட எனக்கு சமீபத்தில் வெளியான தோனி நாட் அவுட்(தோல்வியுறா தோனி) என்ற படத்தில் ஹரிஹரனும்,ஸ்ரேயா கோஷலும் தனித்தனியாய் பாடி வெளியான "விளையாட்டா பட கோட்டி" பாடலை கேட்டதும் அதனை டூயட் பாடலாய் கேட்டு விடவேண்டுமென்ற கோட்டி பிடித்தது.வலைதளத்தில் தேடிப் பார்த்தேன்.கிடைக்கவில்லை என்றால் விட்டு விடக்கூடிய கோட்டியா எனக்கு பிடித்தது. இல்லையில்லை.கேட்டால் தான் அடங்கும் கோட்டி அது.அவ்வேளையில் தான் உள்மனம் "நீயே உருவாக்கு" என்று உளறி, வென்றும் காட்டியது.
இப்போதெல்லாம் இரவு தூங்கு முன் ஒரு முறையாவது
 "விளையாட்டா படகோட்டி"
என்ற இந்த டூயட் பாடலை கேட்டால் தான் இந்த கோட்டிகாரனுக்கு தூக்கமே வருகிறது. தூக்கத்தில்,
இயக்குநர் :  பிரகாஷ் ராஜ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துக்குமார்
பாடகர்                     : ஹரிஹரன்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
  ஆகிய அனைவரும் உரிமை பெறாமல் இப்பாடலை இணையத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாக கனவு வருகிறது.கோட்டிக்காரன் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா? விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

8 comments:

 1. என் இனிய நண்பர் சேக்காளிக்கு,
  என் வலைப்பதிவுக்கு வருகை புரிந்து, ‘மனித நேயம்’ என்னும் என் சிறுகதையைக் குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்தமைக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.
  மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 2. இந்தப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன். ராஜா எப்போதும் ராஜாதான்.அருமை.வைரமுத்துவிற்குப் பிறகு குறிப்பிடும்படி பாடல் வரிகளில் தனித்துவம் பெற்றவராக இருக்கிறார் முத்துக்குமார்.பகிர்வுக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 3. நணபர் சேக்காளி அவர்களுக்கு,என்வலைப்பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி! “கோடு”வை நீக்கச் சொல்வதற்கு காரணத்தை கூறியிருக்கிறேன். நானும் முன்னோரு காலத்தில் இளையராஜாவின் ரசிகனாதான இருந்திருந்திருந்தேன். இடையில் அரசியல் வழக்கு காரணமான மக்களின் நண்பன்கள் என்செவுளை பேத்துபிட்டார்கள்.அதனால் நான் யாருடைய ரசிகனாகவும் இல்லை

  ReplyDelete
 4. நன்றாக இருக்கிறது டூயட் பாடல்

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு தோழமையே.

  ReplyDelete
 6. செய்தியாளனாக செய்தியைத் தரும்போது 'திரு, திருமதி, மாண்புமிகு, அவர்கள், மேன்மைமிகு, மானமிகு, உயர்திரு' போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. பத்திரிகைகளை கூர்ந்து நோக்கினால் இவ் உண்மை புலப்படும்.
  அதனால் 'திரு' பயன்படுத்தாமல் இருப்பதில் தவறொன்றுமில்லை.

  ReplyDelete
 7. படித்தேன் ரசித்தேன்

  ReplyDelete
 8. இது ஒரு சோக தத்துவப்பாடல்; தமிழ்திரையிசை இலக்கணப்படி இப்படி இருக்கலாமே என்று நான் முயற்சி செய்தது.

  பாடல்: விளையாட்டா படகோட்டி
  படம்: தோனி
  பாடியவர்கள்: ஹரிஹரன் - ஸ்ரேயா கோஷல்
  பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

  பாடலுக்கு: http://www.mediafire.com/?7cqdecd8gpqazgo

  கேட்டு பாருங்கள்.......................

  மேலும் நானும் என் நண்பர் நாசரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும் இங்கே............

  http://www.youtube.com/user/ponkarthikraghunath/videos?view=0&flow=grid

  இந்த youtube வீடியோவிற்கு கீழே media fire mp3 லிங்கும் இருக்கும்

  ReplyDelete